×

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் புதிய தடுப்பு மருந்து ரஷ்யாவில் அறிமுகம்: நோயாளிகளுக்கு வழங்க அனுமதி

மாஸ்கோ: கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்துதற்காக கண்டுபிடிக்கப்பட்ட  ‘அவிபாவிர்’ என்ற புதிய மருந்துக்கு முதல் முறையாக ரஷ்யாவில் அங்கீகாரம்  வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்குமு் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாக கூறி வருகின்றன. இந்நிலையில், உலகளவிலான பாதிப்பில் 3வது இடரஷ்யாவில் இதுவரை 5 லட்சத்து 2,436  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரானாவால் பாதிக்கப்பட்டோர் அதிகம்  உள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரஷ்யாவில் புதிய மருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘அவிபாவிர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய  மருந்தை மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அரசு அங்கீகாரம்  அளித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத நேரடி நிதி முதலீடு உள்ள கெம்ரார்  என்ற நிறுவனமானது இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. அரசு அங்கீகாரம்  அளித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அவிபாவிர் மருந்து விநியோகம்  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்டிஐஎப் தலைவர் கிரில் டிமிட்ரிவ்  கூறுகையில், “ரஷ்யாவில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அவிபாவிர் மருந்தை  விநியோகம் செய்யக்கோரி 10க்கும் மேற்பட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 80  மாகாணங்களில் முதல் கட்டமாக 7 மாகாணங்களுக்கு இந்த மருந்து விநியோகம்  செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 60 ஆயிரம் பேருக்கு  சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்தை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது,’’ என்றார்.

காசநோய், போலியோ மருந்துகள்
காசநோய், போலியோ தடுப்பூசிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரில்லோ, காசநோய்க்கு பயன்படுத்தப்படும், ‘பேசில்லஸ் கால்மெட்டி குய்ரின்’ என்ற, அதாவது ‘பிசிஜி’ என அழைக்கப்படும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிக்கு தலைமை ஏற்றுள்ளார். இந்த மருந்து ஏற்கனவே உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதோடு, மிகவும் பாதுகாப்பானது என அறிக்கைகளும் அளித்துள்ளன. இதேபோல், மற்றொரு ஆராய்ச்சியாளர்கள் குழு, கொரோனா செயல்பாட்டை குறைப்பதற்கு இதை பயன்படுத்தும்படி போலியோ தடுப்பு மருந்தை பரிந்துரை செய்துள்ளனர்.

Tags : Russia , Corona treatment, new immunization, Russia, patients
× RELATED ரஷ்யாவில் உயர்கல்வி பயில...